4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- கவலையளிக்கும் இந்திய நிலவரம்!

By Irumporai Apr 30, 2021 04:43 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,87,62,976 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,498 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,08,330 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 31,70,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.