சீனாவில் கொரோனா 4-ம் அலை? - ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு... - பெய்ஜிங்கில் கட்டுப்பாடு தீவிரம்..!
தற்போது சீனாவில் கொரோனா 4ம் அலை அதிகமாக பரவி வருவதாகவும், ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நோய்க் கிருமியை உருவாக்க திட்டம்?
சமீபத்தில் பாகிஸ்தானும், சீனாவும் சேர்ந்து ராவல்பிண்டிக்கு அருகில் ரகசியமாக DSTO என்ற பெயரில் புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியானது.
உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும், பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (DSDO) என்ற பெயரில் பாகிஸ்தானில் மிக கொடிய நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்ய அறிவியல் உள்கட்டமைப்பை அமைத்துள்ளதாகவும், இந்த இருப்பிடம் மிகவும் ரகசியமாக இருப்பதாக ஜியோ-பொலிடிக் அதிர்ச்சி தகவலை தெரிவித்தது.

கொரோனவை விட மிக கொடூர வைரஸ்
கொரோனாவை விட பல கொடிய வைரஸ் கிருமிகளை இந்த ஆய்வகங்களில் சீனா உருவாக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், சீனா ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா இந்த உலகத்திற்கு பரவியிருக்கக் கூடும் UK இன்டெல் தகவல் தெரிவித்தது.
இத்தகைய மிக கொடிய நோய்க்கிருமியை ஆயுதமாக பயன்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகவல் சர்வதேச நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் இத்தகவலை முழுமையாக மறுத்துள்ளது. அதுபோல் எந்த உள்ளட்டமைப்புகள் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் அதிவேகமாக பரவும் கொரோனா 4ம் அலை
இந்நிலையில், தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு தினமும் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தலைநகர் பெய்ஜிங்கில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவில் 10,729 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று பரவி வருகிறது.
இதனையடுத்து, கொரோனா 4-ம் அலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்தில் உலக மக்கள் உள்ளனர்.