புரட்டாசி மாதம் கொரோனா புரட்டி எடுக்கும் .. நித்யானந்தா எச்சரிக்கை!

corona warns nithyananda 3wave
By Irumporai Jul 17, 2021 04:22 PM GMT
Report

கொரோனாவின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில் புரட்டாசி மாதம் கொரோனா 3 ம் அலை பாதிப்பு கடுமையாக இருக்கும் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3ஆம் அலையை வரவேற்பது போல் உள்ளது.

கொரோனா வைரஸ்களின் திரிபாக  டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன இவை மிகவும் மோசமானவை.

3ஆம் அலை மோசமானதாக இருக்கும். எனவே எனது பக்தர்கள் அனைவரும் எச்சரிக்கையாக வீட்டிலேயே இருங்கள் இல்லையென்றால் கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு மல்டி லேயர் குவாரண்டைன் வசதி உள்ளது.

உங்களை காப்பாற்றிவிடுவேன். ஆசிய கண்டத்தில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை ஆகவே அனைவரும் கைலாசாவிற்கு இடம்பெறுவது நல்லது.

மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். இந்தியாவை கொரோனா மூன்றாம் அலை புரட்டாசி மாதத்தில் புரட்டி எடுக்கும். தனது காலடி வைத்தால் தான் கொரோனா மறையும் எனக் கூறியுள்ளார்