கொரோனாவால் அதிகம் பாதிப்படையும் குழந்தைகள்... 3வது அலை பரவலா என ஆய்வு?
Puducherry
Covid 3rd wave
By Petchi Avudaiappan
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு அதிகளவு கொரோனா பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா முதல், மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக தாக்கிய நிலையில் 3வது அலை குழந்தைகளை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே புதுவையில் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் கொரோனா 3வது அலைக்கு காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் இதுகுறித்த தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.