கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? ஆதாரம் இல்லை : எய்ம்ஸ் இயக்குனர்

 கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற தகவலுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார் ரந்தீப் குலேரியா.

கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 60 -70% குழந்தைகளுக்கு ஏற்கனவே இணை நோய்கள் இருந்ததாக கூறினார்.

அதே சமயம் குழந்தைகள் விரைவாக குணம் அடைந்ததையும் எய்ம்ஸ் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் வரும் கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற தகவலை மறுத்துள்ள அவர்.

இந்த தகவலுக்கு எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லை என்றும் குழந்தைகளை 3வது அலை பாதிக்கும் என்பதற்கான தரவுகள் உலகளாவிய அளவிலும் அல்லது இந்திய அளவிலும் இல்லை என்றும் ரந்தீப் குலேரியாதெரிவித்துள்ளார்.   

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்