''கொரோனாவின் 2 வது அலை மிக மோசமாக உள்ளது '' -பிரதமர் மோடி

covid19 modi secondwave indiafight
By Irumporai Apr 25, 2021 06:33 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

இன்றைய உரையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமரின் மன் கி பாத் உரையின் சுருக்கம்:

கொரோனாவின் இரண்டாவது அலை தாக்குதல் நாட்டையே உலுக்கிவிட்டது என கூறிய பிரதமர் மோடி

கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பெரும் முயற்சி செய்து வருவதாக கூறினார்.

அதே சமயம் உலகிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சை இந்தியாவில் அளிக்கப்படுவதகவும் கொரோனா தொற்றுக்கு எதிராக மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் போராடி வருவதாகவும் கூறினார்.

தற்போது அமலில் இருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் தொடரும் என அறிவித்த பிரதமர் மோடி.

  தடுப்பூசி தொடர்பாக தவறான செய்திகளை யாரும் பதிவிட வேண்டாம் என கூறினார். 

பொதுமக்கள் அனைவரும் ஆக்சிஜன் அளவினை சீரமைக்க மூச்சு பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார்.