முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி!

corona-2nd-wave-india
By Nandhini Apr 20, 2021 01:37 PM GMT
Report

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிவேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவின் பரவலை தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. கொரோனா பிடியில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரும் சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து, தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனால், தனது பண்ணை வீட்டில் முதலமைச்சர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முதல்வரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.