ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை - மத்திய அரசு அதிரடி!
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருவதால், மத்திய அரசும், மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் திக்குமுக்காடி வருகின்றன.
கொரோனா பிடியில் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதுவரை கொரோனா 2-வது அலை தொற்றை இந்தியா சரியான முறையில் கையாண்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது.
அதன் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்கவும், வெளிநாடுகளில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளை விரைவாக அங்கீகரிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.