வீட்டில் வசதி இல்லை - மரத்தில் கட்டிலைக் கட்டி தனிமைப்படுத்திக்கொண்ட வாலிபர்
வீட்டில் வசதி இல்லாத காரணத்தால் மரத்தின் மீது கட்டிலைக் கட்டி கொரானாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் தன்னைத் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளனர். ஆனால், தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையிலும் பலர் உள்ளனர்.
இதற்கு உதாரணமாக, தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த தொற்றுக்கு உள்ளான வாலிபர் ஒருவரின் செயல் விளங்குகிறது.
தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம், கொத்தனிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (25). இவரது குடும்பத்தில் 4 பேர் உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடு ஒன்றை அறை கொண்டவை.
இந்நிலையில், சிவாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிவா தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தங்களுடைய வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சிய சிவா வினோதமான வகையில், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரே ஒரு அறை இருக்கும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொள்வது எப்படி என்று ஆலோசனை செய்த சிவா, இதற்காக தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார். அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டிய சிவா அதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan