இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

corona-2nd-wave
By Nandhini Apr 23, 2021 06:01 AM GMT
Report

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 3.32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது, முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை கொரோனா தொற்று படு மோசமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசும், மாநில அரசும் திணறி வருகிறது. இதனையடுத்து, கொரோனா தொற்று நோயாளிகள் நாளுக்கு நாள் அதிக அளவில் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு | Corona 2Nd Wave

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா தொற்று நோயாளிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகிறார்கள். பல மருத்துவமனைகளில் நோயாளிகள் துடிதுடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரே நாளில் 2,263 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 1,93,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் 24,28,616 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,62,63,695 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.