மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் எடியூரப்பா
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கடந்த 16ம் தேதி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார்.
ஒருவார சிகிச்சைக்கு பிறகு எடியூரப்பா உடல் நலம் தேறினார். அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், நெகட்டிவ் என முடிவுகள் வந்தன. மேலும் நெஞ்சு பகுதியில் இருந்த சளியும் முழுமையாக குறைந்துள்ளது.
இதனையடுத்து, அவர் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மருந்துவனையில் இருந்து புறப்பட்டபோது அவருக்கு மருத்துவர்கள், ஊழியர்கள் வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தனர். சில நாட்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.