நீங்கள் எத்தனை லட்சம் கேட்டாலும் நாங்கள் இவ்ளோதான் அனுப்புவோம் - எடப்பாடிக்கு வந்த ஏமாற்றம்
கொரோனாவின் 2ம் அலையின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 5,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அரசு வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதே சமயம் முன்பை விட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி காலியாகியுள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி இல்லை என்று போர்டு எழுதி மாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றே சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறிக் கொண்டு வருகிறார். ஆனால் 45 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுகிறது.
இதனால், மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், மாநிலத்திற்குக் கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், மொத்தமாக 20 லட்சம் தடுப்பூசி கேட்டதற்கு வெறும் 1 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை மட்டும் மத்திய அரசு அனுப்பி உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 1 லட்சம் கோவாக்சின் மட்டுமே மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.