இன்று முதல் 14 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

closed tamilnadu tasmac
By Praveen May 09, 2021 09:42 PM GMT
Report

இன்று முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

கொரோனாவின் 2-வது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், இன்று முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக நேற்று, நேற்று முந்தினம் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி வழங்கியது.

சமீபத்தில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் டாஸ்மாக் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.