இணை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

COVID-19 Ma. Subramanian
By Irumporai Apr 11, 2023 07:46 AM GMT
Report

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அமைச்சர் விளக்கம்

 அப்போது விளக்கம் கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைகளில் தான் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இணை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Corna Increase Tamilnadu Minister Subramaniyan

மாவட்ட மருத்துவமனைகளில் மாதிரி மருத்துவ பயிற்சி நடத்தப்படாது. தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் உயிர் பாதிக்கும் தொற்று இல்லை. ஒரே இடத்தில் கூட்டமாக பாதிக்கப்பட்டால் 4வது அலை என சொல்லலாம்.

தடுப்பு நடவடிக்கை

இப்போது அந்த நிலை இல்லை. பாதிப்புகள் அதிகரித்தால் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். 2067 மெட்ரிக் டன் ஆக்ஸின் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பாதிப்பு பெரிய அளவில் இல்லை, தனி நபர் என்ற அளவில் தான் உள்ளது. அதே சமயம் இணை நோய் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் இறப்பை சந்திக்க நேரிடும் , அவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்