புகார் அளிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிகாரி - அதிரடி கைது
பாலியல் பலாத்காரம் செய்யப்ப்ட்டது குறித்து புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற சிறுமியை பலாத்கரம் செய்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த மாதம் 22-ந் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் போபாலுக்கு கடத்தப்பட்டு தொடர்ந்து 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பின்னர் அந்த சிறுமியை அவரது கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகே இறக்கிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது.
சிறுமியை மீட்ட காவல் நிலையப் பொறுப்பாளர் சிறுமியின் உறவினரிடம் சிறுமியை ஒப்படைத்தார். இதனையடுத்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறுமியை மறுநாள் லலித்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு காவல் நிலையப் பொறுப்பாளர் அழைத்ததை தொடர்ந்து அவர் மறுநாள் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், பொறுப்பாளராக இருக்கும் அதிகாரி திலக்தாரி சரோஜ் சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற மூன்று பேரை கைது செய்திருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
அதிகாரி திலக்தாரி சரோஜ் தலைமறைவாகியுள்ளதால் அவரை தேடும் வேட்டையில் மூன்று தனிப்படை போலீசார் ஈடுப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை டி.ஜி.பி அளவிலான உயர்மட்ட குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டு, 24 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.