குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய குமரி வாலிபர் கைது.
குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதுாறு பரபரப்பிய கன்னியாகுமரியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதி பண்டாரபறம்பு என்ற இடத்தை சேர்ந்த ஷிபின் (24 வயது) வாலிபர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொறியியல் பட்டதாரியான அந்த வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில், திமுக ஆட்சி மறைமுக தீவிரவாதத்திற்கு துணைபோவதாக வலைதளங்கில் பதிவிட்டதாக கூறி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனில் குமாரின் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.