குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கோவை விரைகிறார் முதலமைச்சர்?
நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக இன்று மாலை கோயம்புத்தூருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த விபரங்களை அறிவதற்காக இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கோவை செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.