குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விபரங்கள் வெளியானது
coonoor flight
By Fathima
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன,
- ராணுவ போக்குவரத்துக்கு பயன்படக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்க முடியும்.
- இந்த ஹெலிகாப்டர் Mi- 17 V5 ரஷ்யாவின் கசன் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
- உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த ஹெலிகாப்டரானது, மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடியது.
- 13 ஆயிரம் கிலோ எடையை தாங்கிச் செல்லும்.