குன்னூரில் 9 பேர் பலியான கோர பேருந்து விபத்திற்கான காரணம்? - காவல்துறை ஷாக் தகவல்!
குன்னூரில் 9 பேர் பலியான கோர பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோர விபத்து
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 61 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இறந்த 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
காரணம்
இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் "ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
9 பேர் காயமின்றி தப்பினர் என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுற்றுலா பஸ் உரிமையாளர் , 2 ஓட்டுநர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.