பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்; மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான் - விளாசும் ரசிகர்கள்!

Tamil Cinema Mansoor Ali Khan Tamil Actors Cool Suresh
By Jiyath Sep 20, 2023 05:13 AM GMT
Report

நிகழ்ச்சி மேடையில் நடிகர் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். 

சரக்கு திரைப்படம்

'கேப்டன் பிரபாகரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் வில்லன் ரோல்களில் நடித்து சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார்.

பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்; மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான் - விளாசும் ரசிகர்கள்! | Cool Suresh Who Behaved Rudely To The Female Host

தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் 'சரக்கு' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வலினா பிரின்ஸ், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன்,கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சரக்கு திரைப்பதத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், தொடர்ந்து பல அநாகரிகமான பேச்சுகளிலும், செயல்களிலும் ஈடுபட்டு வரும் நடிகர் கூல் சுரேஷும் கலந்து கொண்டார்.

அநாகரிக செயல்

அப்போது பெண் தொகுப்பாளினி கூல் சுரேஷை பேச மேடைக்கு அழைத்தார். மேடையில் பேச வரும்போது கழுத்தில் ஒரு மாலை அணிந்து கொண்டு, கையில் ஒரு மாலையுடனும் வந்தார் கூல் சுரேஷ்.

பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்; மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான் - விளாசும் ரசிகர்கள்! | Cool Suresh Who Behaved Rudely To The Female Host

பேசத் தொடங்கும்போது "எல்லாருக்கும் மாலை போட்டீங்களே, ஆனால் ஒருத்தருக்கு மாலை போட்டிங்களா..? என்று பேசியவாறே அருகில் இருந்த பெண் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலையை போட்டார் கூல் சுரேஷ்.

இதனால் கடுப்பான அந்த தொகுப்பாளினி கோபத்துடன், மேடையிலேயே அந்த மாலையை கழற்றி எறிந்தார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்; மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான் - விளாசும் ரசிகர்கள்! | Cool Suresh Who Behaved Rudely To The Female Host

இதனைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் மன்சூர் அலிகான் "கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறு தான். அவருடைய செயலைக் கண்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருக்கான நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார். கூல் சுரேஷின் இந்த அநாகரிகமான செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.