கூல் சுரேஷின் கார் கண்ணாடியை நொறுக்கிய சிம்பு ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

Viral Video Vendhu Thanindhathu Kaadu
By Nandhini Sep 15, 2022 07:16 AM GMT
Report

கூல் சுரேஷின் கார் கண்ணாடியை நொறுக்கிய சிம்பு ரசிகர்களால் தியேட்டர் வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

‛வெந்து தணிந்தது காடு‘

சில மாதங்களாக ‛வெந்து தணிந்தது காடு... அந்த படத்தோடு பெயருக்கு வணக்கத்த போடு’ என்று கூல் சுரேஷ் கத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாகியுள்ளது. இன்று காலை 4:30 மணிக்கு ரசிகர்களுக்கான சென்னை கமலா தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தை பார்ப்பதற்கு சிம்பு ரசிகர்கள் நேற்று இரவு 10 மணிக்கே தியேட்டர் வாசலில் குவியத் தொடங்கினர். இன்று காலை தியேட்டர் வாசலில் குவிந்த ரசிகர்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கோலாகலமாக கொண்டாடினர்.

கார் கண்ணாடி நொறுக்கிய ரசிகர்கள்

அப்போது, சிவப்பு கலர், ‘மொட்டை மாடி’ BOOM காரில் வந்தார் கூல் சுரேஷ். என்னவோ சிம்புவை பார்த்தமாதிரி ரசிகர்கள் கூல் சுரேஷைப் பார்த்து ஆர்ப்பரித்தனர்.

அப்போது, உடனே காரின் மொட்டை மாடியை திறந்து, மேலே எழுந்து நின்றார் கூல் சுரேஷ். காரைச்சுற்றி நின்று கொண்டிருந்த ரசிகர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், கூல் சுரேஷ் மீது பாயத் தொடங்கினர்.

ஒருவர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணத்தில் நின்று கொண்டிருந்த சிம்பு ரசிகர் ஒருவர், குபீர் என கார் மீது பாய்ந்து, கூல் சுரேஷை அணைத்துக் கொண்டார். ரசிகரின் அந்த பாசத்தை புரிந்து கொண்ட கூல் சுரேஷ் அவரை ஆஸ்வாசப்படுத்தி இறக்கிவிட்டார்.

இதனையடுத்து, சிலர் கார் கண்ணாடி மீது பாய்ந்து, கூல் சுரேஷை நோக்கி பாய்ந்தார்கள். ஒரு கட்டத்தில் பாரம் தாங்க முடியாமல் கார் கண்ணாடி முன்புறம் நொறுங்கி உடைந்தது. நிலைமை மோசமானதையடுத்து, கூல் சுரேஷ், மெட்டை மாடியை இறக்கிவிட்டு, கார் உள்ளே சென்றார்.

cool-suresh-viral-video

கூல் சுரேஷ் வேதனை

இது குறித்து கூல் சுரேஷ் பேசுகையில் -

பூம் காரில் நான் நல்லா கெத்தா தான் வந்தேன்... ஆனால், ரசிகர்கள் கார் மீது ஏறி கண்ணாடி உடைந்து விட்டார்கள். எனக்கு அது அதிர்ச்சியாதான் இருந்தாலும், அது எனக்கு இன்ப அதிர்ச்சி தான். கார் கண்ணாடி உடைந்தாலும், என் இதயம் உடையவில்லை. அந்த கார் கண்ணாடி விலை எவ்வளவு தெரியுமா... என்ன சொல்றதுனு தெரியல. தர்மசங்கடமா தான் இருக்கு என்றார்.