சரக்கு..தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்...!!

Tamil Cinema Tamil nadu Mansoor Ali Khan Tamil Actors Cool Suresh
By Karthick Sep 20, 2023 05:41 AM GMT
Report

நடைபெற்ற சரக்கு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறி நடந்துகொண்டதன் காரணமாக சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கூல் சுரேஷ்

வெந்து தணிந்தது காடு படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய துவங்கிய நடிகர் கூல் சுரேஷ் பின்னர் அநேகபடங்களின் விமர்சனங்களை கொடுத்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வரும் இவர், அப்போது கூறும் கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன.

cool-suresh-misbehaving-with-anchor

அதே போல தற்போது மன்சூர் அலி கான் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் அநாகரீமாக நடந்துகொண்டது தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் விமர்சனத்தை பெற்று வருகின்றது. மன்சூர் அலிகான் படத்தின் நாயகனாக நடித்திருக்கும் படம் சரக்கு. இந்தப் படத்தை ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாஞ்சில் சம்பத் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

அத்துமீறிய செயல்

இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொள்ள பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அழைப்பாளராக நடிகர் கூல் சுரேஷ்ஷும் பங்கெடுத்து கொண்டார். விழா மேடையில் அமர்ந்திருந்த அவருக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அப்போது கூல் சுரேஷ் எல்லோருக்கும் மாலை போடுகிறோமே நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா? என்று கேட்டு அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார். இ

cool-suresh-misbehaving-with-anchor

ந்த எதிர்பாராத சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, கூல் சுரேஷ் இப்படி செய்திருக்கக்கூடாது என கூறிய அவர் கூல் சுரேஷ் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூற கூல் சுரேஷும் பிறகு மன்னிப்பு கேட்டார்.