காணாமல் போன என் அப்பா கிடைச்சுட்டாரு... - மனதார நன்றி சொன்ன கூல் சுரேஷ்..!
காணாமல் போன என் அப்பா கிடைச்சுட்டாரு என்று கூல் சுரேஷ் மனதார அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
‛வெந்து தணிந்தது காடு’
சில மாதங்களாக ‛வெந்து தணிந்தது காடு... அந்த படத்தோடு பெயருக்கு வணக்கத்த போடு’ என்று கூல் சுரேஷ் கத்திக் கொண்டிருந்தார். சமீபத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது.
கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்
படத்தைப் பார்க்க வந்த கூல் சுரேஷை, சிம்பு ரசிகர் ஒருவர், குபீர் என கார் மீது பாய்ந்து அணைத்துக் கொண்டார். ரசிகரின் அந்த பாசத்தை புரிந்து கொண்ட கூல் சுரேஷ் அவரை ஆஸ்வாசப்படுத்தி இறக்கிவிட்டார். இதனையடுத்து, சிலர் கார் கண்ணாடி மீது ஏறி, கூல் சுரேஷை நோக்கி பாய்ந்தார்கள். ஒரு கட்டத்தில் பாரம் தாங்க முடியாமல் கார் கண்ணாடி முன்புறம் நொறுங்கி உடைந்தது. நிலைமை மோசமானதையடுத்து, கூல் சுரேஷ், மெட்டை மாடியை இறக்கிவிட்டு, கார் உள்ளே சென்றார். கூல் சுரேஷின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ போன் பரிசாக தந்த ஐசரி கணேஷ்
வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸுக்கு பிறகு கூல் சுரேஷ் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதனால், மனம் நொந்த சுரேஷ் கண்ணீர் மல்க, தனக்கு சொந்த வீடு கூட கிடையாது என கூறினார். இதனையடுத்து, அவரை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இவருக்கு ஐ போன் பரிசாக வழங்கினார். பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு உதவுவதாக கூறினார்.
என் அப்பா கிடைச்சிட்டாரு...
சமீபத்தில் தன் தந்தையை காணவில்லை என்று கூல் சுரேஷ் சமூகவலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரின் பதிவு வைரலாக பரவியது. அவரின் தந்தையை ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து தற்போது ஒப்படைத்துள்ளார். அதற்கு ஊடக நண்பர்கள் தான் காரணம் என்று அனைவருக்கும் நன்றி என கூல் சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.