நடிச்சு தான் ஜெயிக்க முடில..அதான் இப்படி...ஓப்பனாக சொன்ன கூல் சுரேஷ்

Tamil Cinema Tamil nadu Tamil Actors
By Karthick Sep 20, 2023 02:30 PM GMT
Report

அண்மையில் தொகுப்பாளினி ஒருவரிடம் தான் செய்த அநாகரீக செயலுக்கு நடிகர் கூல் சுரேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.

கூல் சுரேஷ்

வெந்து தணிந்தது காடு படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய துவங்கிய நடிகர் கூல் சுரேஷ் பின்னர் அநேகபடங்களின் விமர்சனங்களை கொடுத்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.அவ்வப்போது படங்களிலும் நடித்து வரும் இவர், அப்போது கூறும் கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன.

இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொள்ள பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அழைப்பாளராக நடிகர் கூல் சுரேஷ்ஷும் பங்கெடுத்து கொண்டார்.

cool-suresh-apologies-for-his-act

விழா மேடையில் அமர்ந்திருந்த அவருக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அப்போது கூல் சுரேஷ் எல்லோருக்கும் மாலை போடுகிறோமே நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா? என்று கேட்டு அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார்.

இந்த எதிர்பாராத சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, கூல் சுரேஷ் இப்படி செய்திருக்கக்கூடாது என கூறிய அவர் கூல் சுரேஷ் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூற கூல் சுரேஷும் பிறகு மன்னிப்பு கேட்டார்.

மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்

இந்நிலையில், தான் இது குறித்து நடிகர் கூல் சுரேஷ் பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கூல் சுரேஷ் ஏதாவது செய்தால் கிறுக்குத்தனமாக செய்வான் என்று தான் நீங்கள் அனைவரும் எடுத்துக் கொள்வீர்கள் என கூறி அப்படி நினைத்து தான், தானும் வேடிக்கையாக செய்தேன் என கூறி, ஆனால் ஒரு பெண்ணுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து பார்க்கவில்லை என குறிப்பிட்டார். நடிப்பால் என்னால் மேலே வரமுடியவில்லை.

cool-suresh-apologies-for-his-act

அதற்காக தான் இந்த மாதிரி கோமாளித் தனங்களை செய்து பிழைப்பை நடத்தி வருகிறேன் என்ற கூல் சுரேஷ், சரக்கு படத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்து, அதற்காக அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.