குக் வித் கோமாளி ஷோ அஸ்வின் புகழின் புதிய திரைப்படம் - படப்பிடிப்பு தொடக்கம்!
'குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ் இணைந்து நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் தான்.

இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும், புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு புத்தாண்டையொட்டி வெளியானது.

இந்த நிலையில், இவர்கள் நடிக்கும் படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்று தலைப்பு வைத்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் பூஜையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிவாங்கி, நடிகை ஷகிலா, செஃப் தாமு உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டு படம் வெற்றியடைய வாழ்த்தி சென்றனர்.
