கிச்சனில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைக்கிறீர்களா? இந்த ஆபத்துகள் வரலாம்!

Healthy Food Recipes Virus
By Vidhya Senthil Dec 24, 2024 03:30 PM GMT
Report

அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைத்திருப்பதால் ஏற்படும்  தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அழுக்கு பாத்திரங்கள் 

அழுக்கான பாத்திரத்தில் நாம் சமைக்கும் போது அதில் நோய் தொற்றுகள் அதிக அளவில் ஏற்படும். இதனால் பாத்திரங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கிச்சனில் அழுக்கு பாத்திரம் நீண்ட நேரம் கழுவாமல் வைக்கிறீர்களா?

அதிலும் குறிப்பாக இரவில் அழுக்கு பாத்திரத்தைக் கழுவாமல் சிங்க் தொட்டியில் போட்டுவிட்டால், நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் அந்த பாத்திரங்களில் வளரக்கூடும்.

உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

  தீமைகள்

அவற்றை எவ்வளவு கழுவினாலும் அனைத்து கிருமிகளும் வெளியேறாது. பின்பு அந்த பாத்திரங்களில் உணவு சமைத்து உண்ணும்போது, ​​கெட்ட பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் சேரும்.அவை நம்மை மிகவும் மோசமாக உணரவைக்கும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

கிச்சனில் அழுக்கு பாத்திரம் நீண்ட நேரம் கழுவாமல் வைக்கிறீர்களா?

உடம்பில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க உணவுப்பொருட்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாக்டீரியா தொற்றினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுடன், வாந்தி மற்றும் வயிறு வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனையும் ஏற்படலாம்.