என்னது குக் வித் கோமாளி ஷோ புகழுக்கு திருமணம் முடிந்ததா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இந்த சூழலில், இவர் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் புகழ் அவரது மனைவியோடு ஜோடியாக கலந்து கொண்டதாகவும், அவர்களோடு மற்ற நட்சத்திரங்கள் புகைப்படம் எடுத்துகொண்டு வாழ்த்தி சென்றதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இது குறித்து புகழ் கூறியதாவது, பிரபலமானலே இந்த மாதிரி தகவல்கள் அதிகமா வருவது சகஜம் என்றும் இதை கேட்டு சிரிக்கவா அல்லது எப்படி ரியாக்ட் பன்னுரது என்றே தெரியல எனவும் தெரிவித்துள்ளார்.
