குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா - வெளியான பட்டியலால் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் டிவியின் அதிக பிரபலனமான நிகழ்ச்சியில் ஒன்றான குக் வித் கோமாளி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் சீரியல்களை தவிர்த்து மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளின் டிஆர்பி டாப் ரேட்டிங்கில் இருக்கும். பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகும் ஜோடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது புதிய நிகழ்ச்சி ரசிகர்களின் ஆஸ்தான நிகழ்ச்சியாகி உள்ளது.

விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலக்கி வரும் பல நட்சத்திரங்களும் ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து கலகலப்பாக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் அது. வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைக்க உள்ளது குக் வித் கோமாளி டீம். இந்த புது சீசனில் பல்வேறு புதிய மாற்றங்களையும் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதுவிதமான பரிமாணத்துடன் இந்நிகழ்ச்சி வர உள்ளதாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி தொடர்பான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி, அனிதா சம்பத் மற்றும் சீரியலில் பிரபலமான நடிகைகளும், அதேபோல் யூடியூபில் பிரபலமான சமையல் பிரபலங்களும் இடம் வர பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முக்கிய கோமாளிகளான பாலா, சிவாங்கி, ஷரத், புகழ் போன்றவர்கள் இந்த முறையும் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 3 வரும் நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிகிறது. வழக்கம் போல் புதுப்புது முயற்சிகளினால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை இந்த சேஷனும் பெறும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்