நான் அப்பாவாகிவிட்டேன்... - திருமணமான 3 மாதத்தில் கையில் குழந்தையுடன் புகழ் - ஷாக்கான ரசிகர்கள்
நான் அப்பாவாகிவிட்டேன்... என்று நடிகர் புகழ் கையில் செல்ல குழந்தையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘குக் வித் கோமாளி’ புகழ்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் புகழ். இந்நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல மதிப்பையும், அன்பையும் புகழ் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் பெற்றார். இதனையடுத்து, நடிகர் அஜித் நடித்த 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் புகழ். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திருமணம்
சமீபத்தில் திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் நடிகர் புகழுக்கும், பென்ஸியாவுக்கு எளிய முறையில் திருமணம் நடந்தது. நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.
இத்திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ‘குக் வித் கோமாளி’ புகழ் திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
குழந்தைக்கு தந்தையான புகழ்
இந்நிலையில், திருமணமான 3 மாதத்தில் செல்ல நாய்க்கு தந்தையாகியிருக்கிறார் நடிகர் புகழ். ஒரு நாய்க்குட்டியை வாங்கியிருக்கும் புகழ் அதற்கு இகிமுஸ் என்று பெயர் வைத்துள்ளார். இதனையடுத்து இகிமுஸுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இகிமுஸுக்கு தந்தையான புகழுக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இகிமுஸ் வந்தது இருக்கட்டும் ஜூனியர் புகழ் எப்பொழுது வருவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.