"ஹேப்பி பர்த்டே பார்ட்னர்.." - காதலியை அறிமுகம் செய்த நடிகர் புகழ் - குவியும் பாராட்டு
குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் நடிகர் புகழ், மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.
இந்நிகழ்ச்சியில், புகழ் சொல்லும் டைமிங் காமெடிகள், வரும் பெண் போட்டியாளர்களிடம் அவர் செய்யும் ரோமான்ஸ்கள், மக்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தார்.
இந்த நிகழ்ச்சியால் கிடைத்த வெற்றி மூலம், தற்போது திரைப்படங்களிலும் புகழ் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் புகார்.
ரியா என்ற பெண்ணுடன் இருக்கும், அந்த புகைப்படத்தை பதிவிட்ட புகழ், 'ஹேப்பி பர்த்டே பார்ட்னர். லவ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புகழுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், விஜய் டிவி பிரபலங்கள் சிவாங்கி மற்றும் பவித்ரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.