படப்பிடிப்பில் சீறிப் பாய்ந்து கடிக்க வந்த புலி… - ஒரு நொடியில் உயிர் தப்பிய புகழ்... - ஷாக்கான ரசிகர்கள்..!
படப்பிடிப்பில் சீறிப் பாய்ந்து கடிக்க வந்த புலியிடமிருந்து ஒரு நொடியில் ‘குக் வித் கோமாளி’ புகழ் உயிர் தப்பிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘குக் வித் கோமாளி’ புகழ்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் புகழ். இந்நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல மதிப்பையும், அன்பையும் புகழ் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் பெற்றார். இதனையடுத்து, நடிகர் அஜித் நடித்த 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
படப்பிடிப்பில் சீறிப் பாய்ந்து கடிக்க வந்த புலி
தற்போது, ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “மிஸ்டர் ஜூ கீப்பர்” திரைப்படத்தில் புலி பராமரிப்பாளராக புகழ் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இயக்குனர் சுரேஷ், நிஜ புலியை வைத்து படமாக்க முடிவு செய்தார். ஆனால், இந்தியாவில் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட புலி ஒன்றை பயன்படுத்தி இப்படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவர உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை இயக்குநர் சுரேஷ் பேட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
புகழ் புலியை குளிப்பாட்டுவது போன்ற ஒரு காட்சி படமாக்கிகொண்டிருந்தபோது, நடிகை கையில் வைத்திருந்த ஸ்ப்ரே ஒன்றை புலியின் முகத்தில் அடித்துவிட்டார். அது புலிக்கு எரிச்சலையூட்டியது. உடனே, அப்புலி தன்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்த புகழின் மேல் பாயப்போனது.
தன் மேல் பாய வந்த புலியை பார்த்து பயந்துபோன புகழ், பின்னால் இருந்த வாட்டர் டேங்குக்குள் கவிழ்ந்து விழுந்துவிட்டார். அந்த புலி கழுத்தில் செயின் போட்டு கட்டிப்போட்டிருந்ததால் புகழ் நல்லவேளையாக உயிர் தப்பினார். இல்லை என்றால் அன்று நடந்திருப்பதே வேறு என்று பேசினார்.