Beast Mood-ல் வந்து அரங்கத்தை அதிர வைத்த குக் வித் கோமாளிகள் - வெளியான ப்ரொமோ - குலுங்கி குலுங்கி சிரித்த ரசிகர்கள்
மக்களின் பேராதரவு பெற்ற குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியானது செம்ம விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களும், கோமாளிகளும் செய்யும் அட்டகாசங்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்களின் நடிப்பு திறமை இருக்கிறது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.
தற்போது இந்த வாரத்திற்கான குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரொமோவை விஜய் டிவி ஒளிபரப்பியுள்ளது.
அந்த ப்ரொமோவில் ஒவ்வொரு கோமாளிகளும் வேற லெவலில் கேட்அப் போட்டு வந்து, குக் வித் கோமாளி அரங்கத்தையே அதிர வைத்துள்ளனர்.
இந்த ப்ரொமோவைப் பார்த்த நெட்டிசன்கள், ப்ரொமோவை பார்க்கும்போதே இப்படி குலுங்கி, குலுங்கி சிரிக்கிறோமே, இந்நிகழ்ச்சியை பார்த்தா அவ்வளவுதான்போல... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த ப்ரொமோ -
ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம்.. ?? #CookWithComali Season 3 - வரும் சனி இரவு 9.30 மணிக்கு மற்றும் ஞாயிறுகளில் இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CWC #VijayTelevision pic.twitter.com/siNRZtLy0U
— Vijay Television (@vijaytelevision) April 14, 2022