குக் வித் கோமாளி பிரபலம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
குக் வித் கோமாளி பங்கேற்ற ரித்திகா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பங்கேற்று வந்தவர் ரித்விகா. இவர் சிறிது காலமே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் பெரிதும் இடம்பெற்றார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரித்திகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இன்ஸ்டாகிராம் நண்பர்களே. கவலைப்பட வேண்டாம். குறைந்த ரத்த அழுத்தம் & உணவு ஒவ்வாமை தான். இன்னும் நான் உடல்நலக்குறைவாக இருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது நான் தேறிவருவதாக எண்ணுகிறேன். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. அனைவரும் உடல்நலனில் அக்கறையோடு இருங்கள்” என்று கூறியுள்ளார்.