இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க கப்பலால் சர்ச்சை
ஆசிய கண்டத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள குவாட் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் இடம்பெற்றுள்ளன. இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு குவாட் அமைப்பில் இந்தியா அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கியது.
இராணுவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நான்கு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. அதே சமயம் சீனாவை எதிர்கொள்கிற நோக்கில் அமெரிக்காவின் பக்கம் அதிகம் சாய்ந்துவிடுவதும் இந்தியாவிற்கு நல்லதல்ல என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க கடற்படையின் கப்பல் ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் முன் அனுமதியின்றி போர் பயிற்சி மேற்கொண்டுள்ளது.

லட்சத்தீவிலிருந்து 130 நாட்டிகல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை அமெரிக்காவே வெளிப்படையாக அறிவித்துள்ளது. முன்னர் இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லைக்குள் பிற நாடுகளின் கப்பல்கள் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. அதனை அமெரிக்கா மீறி உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.