போலீசாரை கீழே தள்ளிவிட்டு ரகளை செய்த அதிமுகவினர்: கே.சி வீரமணி வீட்டில் வெடித்த சர்ச்சை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஏலகிரி உள்ளிட்ட 28 இடங்களில் தமிழக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டின் முன்பு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வீரமணி வீட்டில் ரெய்டு நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் போலீசாரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இருக்கும் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.