கர்நாடகாவின் நிரந்தர முதலமைச்சர் சித்தராமையா தான் - அமைச்சர் பேச்சால் பற்றிய பரபரப்பு
கர்நாடகாவின் நிரந்தர முதலமைச்சர் சித்தராமையா தான் என காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியது புயலை கிளப்பியுள்ளது.
முதலமைச்சரான சித்தராமையா
கர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
முதலமைச்சர் பதவி டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்படுமா என அவரது ஆதரவாளர்கள் மற்றும் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தன.
பின்னர் ஒரு வழியாக காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் அறிவித்தது.

இதையடுத்து கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்.
அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
இருவரும் தலா 30 மாதங்கள் ஆட்சி நடத்துமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியதை ஏற்று பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரும் லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பாட்டீல் 5 ஆண்டுகள் சித்தராமையா தான் முதலமைச்சராக இருப்பார் என கூறினார்.

இரண்டு முதலமைச்சர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், சித்தராமையாவை தவிர வேறு யாருக்கும் அந்த பதவி கிடையாது என்றும் தெரிவித்தார்.
இது பற்றி பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கட்சியில் மூத்த தலைவர்கள் இருப்பதாகவும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.