பெண் கலெக்டருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார்: தவெக எம்எல்ஏ மறுப்பு!

Tamil nadu TVK
By Vinoja Nov 10, 2026 09:29 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.

பெண் கலெக்டருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார்: தவெக எம்எல்ஏ மறுப்பு! | Controversy Over Alleged Message To Collector

எதிர்க்கட்சிகளின் சதி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ என்பதால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தன் மீதும் கட்சி மீதும் அவதூறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் தொடர்பான ஊழல் குறித்து முதல்வருக்கு அறிக்கை அனுப்பியதால், தனக்கு எதிராகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.