சிக்கலில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள்: பழைய ட்வீட்டுகளால் ஆப்பு

James Anderson Ollie robinson England cricket board
By Petchi Avudaiappan Jun 09, 2021 12:06 PM GMT
Report

முன்னொரு காலத்தில் இங்கிலாந்து வீரர்கள் போட்ட பழைய ட்வீட்டுகளால், அவர்களுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இங்கிலாந்து அணியில் ஓலி ராபின்சன் களமிறங்கினார். முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ராபின்சன் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கினார்.

சிக்கலில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள்: பழைய ட்வீட்டுகளால் ஆப்பு | Controversy Of England Players Tweets

8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த போதும் அதனை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரை அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்தது. இந்த சம்பவம் மற்ற வீரர்களுக்கு கடும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சிக்கலில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள்: பழைய ட்வீட்டுகளால் ஆப்பு | Controversy Of England Players Tweets

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சக வீரர் ஸ்டுவர்ட் பிராடை லெஸ்பியன் போல இருப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல் 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனும், ஜோஸ் பட்லரும் இந்தியர்களின் ஆங்கில பேச்சை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவை விளையாட்டாக போட்ட ட்வீட்களா அல்லது உள்நோக்கம் கொண்டவையா என்ற விசாரணையை தொடங்கியுள்ளது.