போராட்டகாரர் ஒருவரை மயி* என்று ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி
போராட்டத்தின் போது கிராம மக்களிடம் பேசி கொண்டிருந்த போது திடீரென ஆவேசமடைந்து ஒருவரை அமைச்சர் மயி* என்று ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் அருகே உள்ளது சித்தலிங்கமடம் ஊராட்சி. அமைச்சர் பொன்முடி தொகுதியில் உள்ளது இந்த ஊராட்சி.
இந்த ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வருவாய் துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கடையடைப்பு போராட்த்தில் ஈடுபட்டு வந்தனர்.
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
இதையடுத்து அவர்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொன்முடியை முற்றுகையிட்ட மக்கள். அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்ப தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சலசலப்புக்கு மத்தியில் கடும் ஆத்திரம் அடைந்த அமைச்சர் பொன்முடி ஒருவரை ஒருமையில் பேசினார்.
தற்போது அவர் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்து வருகிறது.