ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்க முடியாது : காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு கடந்த 25ந்தேதி பதவியேற்று கொண்டார்.
பதவியேற்பு விழாவில் பேசிய முர்முஒரு வார்டு கவுன்சிலர் நிலையில் இருந்து இப்போது ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நம் நாட்டின் பெருமை. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது எனக் கூறினார்.
திரௌபதி முர்மு
இந்த நிலையில், ஜனாதிபதி முர்மு பற்றி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய பேச்சு சர்ச்சையை எழுப்பியது. இதுபற்றி அவர் பேசிய வீடியோ ஒன்றில், ஜனாதிபதி திரௌபதி முர்முவை, ராஷ்டிரபத்னி எனக் கூறி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால், நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று திரண்ட பா.ஜ.க.வை சேர்ந்த ஆண் மற்றும் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.
மடுவை மலையாக்க முயற்சி
கைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்.
இதுபற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.

தவறுதலாக நான் ராஷ்டிரபத்னி என கூறிவிட்டேன். இதற்காக நீங்கள் இப்போது என்னை தூக்கிலிட வேண்டும் என விரும்பினால், செய்யுங்கள்... ஆளும் கட்சி உள்நோக்கத்துடன் மடுவை மலையாக்க முயற்சி செய்கிறது என கூறியுள்ளார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan