கழிவுநீரை சுத்தம் செய்யாத ஒப்பந்ததாரர்.. தலையில் குப்பைகளை கொட்டிய எம்.எல் ஏ!

mumbai viralvideo
By Irumporai Jun 14, 2021 09:50 AM GMT
Report

மும்பையில் சாலையில் தேங்கிய கழிவு நீரை சுத்தம் செய்து அகற்றாதகஒப்பந்ததாரர் தலையில் சிவசேனை  எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் குப்பை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்துள்ளது.

இந்த நிலையில்  மும்பை கண்டிவாலா தொகுதியை சேர்ந்த மக்கள் சிவசேனை சட்டப்பேரவை எம்.எல்.ஏ. திலீப் லண்டேவிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனால் எம்.எல்.ஏ. திலீப் லண்டே கழிவுநீர் சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரரை கழிவுநீரில் அமர வைத்து தனது ஆதரவாளர்களிடம் குப்பைகளை  ஒப்பந்ததாரர் தலையில் கொட்டுமாறு கூறியுள்ளார்.

உடனே, எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்களும் குப்பையை அந்த ஒப்பந்ததாரர் தலையில் கொட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், திலீப் லண்டேவின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.