விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த ஊழியர்கள்

Protest Virudhunagar Contract Employees
By mohanelango May 20, 2021 06:05 AM GMT
Report

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி வழங்குவதாக கூறி வரவழைத்து அழைக்கழிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அதிவேகமாக பரவி வருகிறது இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக பணி புரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தற்காலிகாக பணியாளராக பணிபுரிய தேர்வு செய்யபட்ட செவிலியர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஆணை வழங்குவதாக கூறி நேற்று இரவு தொலைபேசி மூலம் அழைப்பு வந்ததாகவும் அதை ஏற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி ஆணை வாங்க வந்துள்ளனர்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த ஊழியர்கள் | Contract Employees Protest Outside Virudhunagar

ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கு பணி ஆணை இன்று வழங்கவில்லை எனக் தெரிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியர் அலுவகலம் முன்பு அமர்ந்து ஆணை வாங்காமல் செல்ல மாட்டோம் எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நாளை முறையாக அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்