ஆப்கானிஸ்தானில் தொடரும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் - கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்த தடை
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதித்து தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
தலிபான்கள் அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களில் கருத்தடை சாதனங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாலிபான்கள் விதித்துள்ள உத்தரவில், கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைத்திருக்க கூடாது, கருத்தடை சாதனங்கள் விற்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ள தாலிபான்கள் மருந்தகங்களில் சோதனை செய்யும் போது கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த தடை உத்தரவானது காபூல் மற்றும் மஸார் - இ ஷெரிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் இ்நத தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் நாடு முழுவதும் தடை விரிவுப்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.