கண்டெய்னர் லாரி மோதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்!
பேர்ணாம்பட்டு அருகே கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ராஜா என்பவர் தனது சொந்த ஊரான பேரணாம்பட்டு கிராமத்திற்கு தனது 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜா மற்றும் அவரின் மனைவி காமாட்சி மற்றும் , ஒரு குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில்வினோத் என்ற குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.
இந்த விபத்து குறித்து பேர்ணாம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பலியானது அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது