இந்திய கடற்கரையில் கவிழ்ந்த கப்பல் - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

India Ship
By Karthikraja May 25, 2025 05:22 AM GMT
Report

 இந்திய கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.+

 கவிழ்ந்த கப்பல் 

லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான 184 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3, நேற்று விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி புறப்பட்டது.

அப்போது சுமார் 38 கடல் மைல் தொலைவில் கப்பல் கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்க தொடங்கியுள்ளது. 

இந்திய கடற்கரையில் கவிழ்ந்த கப்பல் - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன? | Container Ship Capsizes Near Kerala Coast

உடனடியாக கப்பலில் இருந்த மாலுமிகள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர். ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கப்பலில் மொத்தம் 24 பேர் இருந்த நிலையில், 9 பேர் லைப் ஜாக்கெட் அணிந்து கடலில் குதித்து உயிர்தப்பினர். இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் ஏற்றி வரப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் கடலில் கலந்து, மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கடலிலோ அல்லது கடற்ரையிலோ எண்ணெய் அல்லது கண்டெய்னர்களை கண்டால், பொதுமக்கள் அதனை தொடாமல், அருகே உள்ள கடலோர காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.