பொருளாதார வீழ்ச்சியில் நாடு - ஆனால் விற்றுத் தீர்ந்த ஆணுறைகள்!
சீனாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதும் ஆணுறைகள் விற்பனை அதிகரித்துள்ளது என்று டியூரெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் சந்தை வீழ்ச்சி
சீனாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகிய காரணங்களால் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு போராடி வருகிறது. இங்கிலாந்து நாட்டு நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகளில் "சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் சீனாவின் நுகர்வோர் எண்ணிக்கை அபரிமித வளர்ச்சி காணும் என்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நிறுவனம் கணித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு சீனா வளர்ச்சி மந்த நிலையில்தான் உள்ளது என்று இந்த மாத பொருளாதார தரவு தெரிவிக்கிறது.
இதனால் வீழ்ச்சியடைந்த நுகர்வோர் நம்பிக்கையை மீட்டு அவர்களை ஊக்குவிக்க சீன நாட்டு அரசு அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணுறைகள் விற்பனை அதிகரிப்பு
அதிகரிப்பு ஆனால் நுகர்வோர் தரப்பில் பெரும் வீழ்ச்சி கண்டபோதும், ஆணுறைகள் விற்பனை அதிகரித்துள்ளது என மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இதுகுறித்து டியூரக்ஸ் என்ற ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரெகிட் நிறுவனத்தின் சி.இ.ஓ. துரந்த் கூறும்போது "ஒட்டுமொத்தத்தில் பொருளாதார மீட்சியில் சற்று மந்தம் காணப்பட்டாலும், தம்பதியை உற்சாகமூட்டும் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த ஆணுறைகளை புதிய மூலப்பொருட்களைக் கொண்ட புதுமையான விஷயங்களை புகுத்தினோம். இரண்டாவது விஷயம் சீனாவில் மக்கள் இரவு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர். மேலும், கொரோனா பெரும் தொற்றிற்குப் பின்னர் நிறுவனத்தின் வளர்ச்சி 8.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிக மென்மையான ஆணுறைகளை சீனாவில் தயாரிக்க உள்ளோம் என்றும் இந்த திட்டப் பணிகள் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என்றும் டியூரெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.