70 வருடங்களாக ஜெயிக்காத தொகுதி - சாதுர்யமாக பாஜகவுக்கு ஒதுக்கிய அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சென்னையில் உள்ள துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதில் திருவண்ணாமலையும் அடக்கம்.
இந்நிலையில் திருவண்ணாமல தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் தமிழக அரசியல் வரலாற்றில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக ஒருமுறை கூட வென்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 1952 தொடங்கி தற்போது வரை திருவண்ணாமலையில் திமுகவும், காங்கிரசும் தான் மாறி மாறி வென்று வருகின்றன.
தற்போது பாஜகவுக்கு இந்த தொகுதி வழங்கப்பட்டிருப்பது பலரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திமுக கோட்டை என கருத்தப்படும் திருவண்ணாமலையில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்ள இருக்கிறது.