திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? இன்று வெளியாக வாய்ப்பு
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன, அதிமுக 177 இடங்களுக்கு தன்னுடைய வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் நேற்று வரை திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
பல கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியிடப்பட இருக்கின்றன. திமுக இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட இருக்கிறது. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருக்கிறது.
திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
அவர் வருகிற 15-ம் தேதி தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.