இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் - திமுக உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது, ஒவ்வொரு கட்சியும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று கட்சிகளுடன் மட்டுமே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது, இக்கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக அறிவித்திருந்தது. பேச்சுவார்த்தையும் சுமூகமாக நடைபெற்ற நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலும் திமுக வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “தேர்தலில் எண்ணிக்கையை விட லட்சியமே முக்கியம். பாஜகவை வீழ்த்த வேண்டும். திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்