சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரங்கேறிய சதி திட்டம் அம்பலம் - வெளியான பகீர் தகவல்..!

Chennai Super Kings Mumbai Indians IPL 2022
By Thahir May 13, 2022 12:00 AM GMT
Report

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதி நடந்துள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் நேற்றை ஆட்டத்தில் (12-ந் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரங்கேறிய சதி திட்டம் அம்பலம் - வெளியான பகீர் தகவல்..! | Conspiracy Against Chennai Super Kings Exposed

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற அணிகள் என்ற பெயரை எடுத்தது இந்த இரண்டு அணிகள் தான்.

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்து ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

நேற்று இரு அணிகளும் மோதின.டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவோன் கான்வே களம் இறங்கினர்.

முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார்.அப்போது 2-வது பந்தை எதிர்கொண்ட டேவோன் கான்வே சந்தித்த முதலல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டாகி சக வீரர்களுக்கும் ரசிகர்களும் அதிர்ச்சி கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரங்கேறிய சதி திட்டம் அம்பலம் - வெளியான பகீர் தகவல்..! | Conspiracy Against Chennai Super Kings Exposed

இருந்த போதும் அது அவுட்டில்லை என உணர்ந்த கான்வே உடனடியாக ரிவியூ செய்ய கோரி அம்பயரிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது தான் மிகப்பெரிய சதி செய்யப்பட்டது அம்பலமானது.ஏனெனில் அந்த நேரத்தில் போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரிவியூ செய்ய முடியாது என்று அம்பயர் கூறியதால் ரசிகர்கள்,வர்ணனையாளர்கள்,முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு முறை கூட இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது கிடையாது. மிகப்பெரிய மைதானத்தில் ராட்சத மின்விளக்குகள் எரியும் அளிவிற்கு இருந்த மின்சாரம் ரிவியூ செய்வதற்கு மட்டும் ஏன் இல்லாமல் போனது என்பது புரியாத புதிராக உள்ளது.

அத்துடன் கான்வே எதிர்கொண்ட அந்த பந்து பிட்ச்சிங் அவுட் சைட் ஆஃப் பகுதியில் பட்டதால் கண்டிப்பாக பெரும்பாலான அம்ப்யர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் எதையுமே யோசிக்காமல் உடனடியாகக களத்திலிருந்த அம்பயர் கையை உயர்த்திய நிலையில் ரீப்ளேயில் பார்க்கும் போது தெளிவாக அவுட்டில்லை என்பது பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் அப்பட்டமாக தெரிந்தது.

அதனால் ரிவ்யூ எடுத்திருந்தால் கண்டிப்பாக அவர் அவுட்டாகியிருக்க மாட்டார். 2.4 ஓவர் வரை வான்கடே மைதானத்தில் மின்சாரம் இல்லாமல் போட்டி நடைபெற்ற நிலையில் அதற்கிடையே ராபின் உத்தப்பாவும் அதே போன்று எல்பிடபிள்யூ முறையில் ரிவ்யூ எடுக்க முடியாமல் சந்தேகத்துடன் அவுட்டாகி சென்றார்.

16 ஓவர் முடிவில் சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சென்னை அணியில் தோனி அதிகபட்சமாக 36 ரன்களை எடுத்திருந்தார்.மும்பை அணி வீரர் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரங்கேறிய சதி திட்டம் அம்பலம் - வெளியான பகீர் தகவல்..! | Conspiracy Against Chennai Super Kings Exposed

இதையடுத்து களம் இறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 18 ரன்களிலும்,கிஷான் 6 ரன்களிலும் அவுட்டாகினர்.

பின்னர் வந்த திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி 34 ரன்கள் எடுத்தார்.மும்பை அணி 14.5 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் எடுத்தது.இதையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மாபெரும் சதி நடந்திருப்பதாக ரசிகர்கள் வேதனை கலந்த கோபத்துடன் ட்வீட் செய்து வருகின்றனர்.